// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி - தலைவர்கள் சிலைக்கு ஆர்.கே.ராஜா‌ மாலை அணிவித்து மரியாதை

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி - தலைவர்கள் சிலைக்கு ஆர்.கே.ராஜா‌ மாலை அணிவித்து மரியாதை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா சென்னை தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் ரூபாய் பத்தாயிரம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட பணம் செலுத்தி விருப்ப மனு செய்திருந்தார். அதனை தொடர்ந்து விஜய் திருச்சி கிழக்கு தொகுதி போட்டியிட்டு திமுக வேட்பாளர் இனிக்கோ இருதயராஜை தோற்கடித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் திருச்சி மரக்கடையில் உள்ள எம்ஜிஆர் சிலை, சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை, மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை , அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தவெக தொண்டர்கள் மரியாதை செலுத்தினார்கள்.






ஒரு வேட்பாளர் வெற்றி பெற்ற பின் மறைந்த தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம் இந்த நிலையில் திருச்சி கிழக்கு பகுதியில் விஜய் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு பதிலாக ஆர்.கே,ராஜா விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments