// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது

திருச்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் - கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் அமைப்பு சாரா மாநில தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

நிகழ்வில் மாநில நிர்வாகிகள் கலைப்பிரிவு அருள், வேதாரண்ய உப்பு சத்தியாகிரக தலைவர் பூக்கடை பண்ணீர், மாவட்ட நிர்வாகிகள் சக்கரபாணி, ராஜா, சிவா வைத்தியநாதன், விமல், ஹக்கீம், ஷேக்தாவுத், அசோகன், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், மார்க்கெட் பகதூர்ஷா, புத்தூர் மலர் வெங்கடேஷ், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ், சுப்ரமணியபுரம் எட்வின், பஞ்சப்பூர் மலையாண்டி, வரகனேரி இஸ்மாயில், உறையூர் பாக்யராஜ் அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலா செலஸ், அபிநயா ரகுநாதன், அமைப்பு சாரா பிரிவு மகேஷ், வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், கலைப்பிரிவு சுப்புராஜ், மனித உரிமை பிரிவு எஸ் ஆர் ஆறுமுகம், விவசாய பிரிவு அண்ணாதுரை, ஐடி பிரிவு கிளமென்ட், இந்திரா தோழி மாரீஸ்வரி, குணசித்ரா, பொறியாளர் பிரிவு பாரித், விளையாட்டு பிரிவு மன்சூர் அலி, இலக்கிய பிரிவு பத்பநாபன்,  சரவணன்,  வார்டு நிர்வாகிகள் கண்ணன், சம்பத், அபுதாகிர், அஞ்சலி, ஆரிஃப், ரவி சுந்தரம், சரவணன், ஜாஹிர் உசேன், சையது, மூர்த்தி, ரஃபிக், ரமேஷ், விஸ்வநாதன், அன்சார்அலி, சாகுல்அமீது, ஜாஹிர், கலையரசி, தமிழரசி, ஜாபர், பாபுபாய், காமராஜ், பாண்டியன், தினேஷ்குமார், லோகநாதன், நடராஜன், ஷங்கர், செல்லயன், சித்தார்த் மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

1. பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுமக்களோடு கொண்டாடவேண்டும்.

2. ⁠லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்! கையெழுத்து இயக்கம் ஒரு வாரம் நடைபெறும்.

3. ⁠தெருமுனை கூட்டங்கள் கோட்டம் வாரியாக  நடத்த வேண்டும்.


4. தமிழ்நாடு வாரிய தலைவர்களுக்கான வாய்ப்புகள் காங்கிரஸ் பேரியக்க தீவிர தொண்டர்களுக்கு வழங்க வேண்டும்.

5. ⁠மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments