NEWS UPDATE *** “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்க கூடாது” இந்திய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு *** பள்ளி கல்வித்துறை அமைச்சர் அலுவலகம் முற்றுகை - பா.ஜ.க வினர் கைது

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அலுவலகம் முற்றுகை - பா.ஜ.க வினர் கைது

பாரதீய ஜனதா கட்சியின் மாநில OBC பொதுச்செயலாளர் சூர்யாசிவா கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சிக்கு பயணிகளுடன் வந்த  ஆம்னி பேருந்தை கடத்திச் சென்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 



இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக திருச்சி பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்திருந்தனர். 



இதனை தொடர்ந்து சத்திரம் பேருந்து அருகில் உள்ள காமராஜர் சிலை முன்பு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகையிட முனைந்தனர். 




இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து பிஜேபியினரை காவல்துறையினர் கைது செய்தனர். 




முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அலுவலகம் முன்பு மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Post a Comment

0 Comments