NEWS UPDATE *** “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்க கூடாது” இந்திய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு *** திருச்சி முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அலுவலகத்தில் ஓ.பி.எஸ் புகைப்படம் கிழிப்பு

திருச்சி முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அலுவலகத்தில் ஓ.பி.எஸ் புகைப்படம் கிழிப்பு

அதிமுகவில் தற்பொழுது ஒற்றை தலைமை விவகாரம் நடந்து வரும் நிலையில் அதிமுகவில்  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இருதரப்பு களாக செயல்பட்டு வருகின்றனர்.


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்...


இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் அதிமுக அமைச்சர்  பரஞ்சோதி தெரிவித்திருந்தார்..



இந்நிலையில் இன்று திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ‌.பன்னீர்செல்வம் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. ..

இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments