திருச்சி புறநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ராமசாமி, முனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் சந்தானம், திருச்சி புறநகர் மாவட்ட சிஐடியு செயலாளர் சிவராஜ், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்ட குழு அழகர்சாமி, பொருளாளர் சரவணன் மாநிலக்குழு உறுப்பினர் புஷ்பராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியமும் நிலுவைத் தொகையையும் உடனே வழங்கிட வேண்டும்.
தூய்மைப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீருடை உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.
ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி ரூ. 50 ஆயிரம் பணிக்கொடை,
ரூ.2000 ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும்.
0 Comments