NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** உலக சுற்றுச்சூழல் தினத்தில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

கோவையில் உலக சுற்றுச்சூழல் தினத்தில்  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில்  கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மக்கும் பைகளை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது ...


காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில தலைவர்  வழக்கறிஞர் சுந்தரவடிவேலுு அவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த  பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும்  மாணவ மாணவிகளுக்கும் மக்கும் பைகளை வழங்கி  நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்..



சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்  நிறுவனர் தலைவர்  குமார் பொது செயலாளர்  சுப்புரமணியம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்(ஓய்வு)  கிருஷ்ணசாமி  காந்திபுரம் காவல் நிலைய  ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள்  மத்தியில்  மக்கும் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் அதனை தொடர்ந்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில்  உள்ள கூட்டரங்கில் உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து கூட்டம் நடைபெற்றது... தமிழ் தாய் வாழ்த்து பாடலை இசை கலைமாமணி      சாந்தினிகுமார் , ஜஸ்வர்யா ஆகியோர் பாட நிகழ்ச்சி தொடங்கப்பட்டது ...


 இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வருகை புரிந்த மாண்புமிகு முன்னாள் நீதிபதி முகமது ஜீயாபுதின் அவர்களை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்  நிறுவனர் தலைவர்  குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்...




நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முன்னாள் நீதிபதி முகமது ஜீயாபுதின் அவரது உரையில் இன்றைய நவீன வளர்ச்சி மூலமாக இயற்கையை நாம் அழித்து அதன் மூலமாக பணம்  சொத்து ஆகியவற்றை பல தலைமுறைகள் அனுபவிக்க வேண்டும் என்று சேர்த்து வைத்தாலும் அது எதுவும் நிரந்தரமாக  நாம் அனுபவிக்க இந்த பூமியில் நாம் இருக்க போவதில்லை என்று உணர்வதில்லை ஒரு பெரிய மரத்தில் பல கிளைகள் இருந்தாலும் பறவைகள்  அவை அனைத்திலும் கூடு காட்டுவதில்லை மாறாக ஒரே ஒரு கூடு கட்டி வசிக்கின்றன ஆனால் மனிதனே தனக்கு ஒரு வீடு பிள்ளைகளுக்கு தனி  வீடு பேரப்பிள்ளைகளுக்கு இப்படி பேராசையுடன் வாழ்ந்து வருகிறான் காற்று நீர் நிலத்தை நாம் மாசுபடுத்தி விட்டு சேர்த்து வைக்கும் எந்த பொருட்களும் பூமியில் நிலதிருப்பதில்லை ஆகவே நாம் ஓவ்வொரும் நமது சமூக கடமை பொறுப்புகளை உணர்ந்து செயல் பட வேண்டும் என்றார் மேலும் நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைத்து கொண்டு துணி பைகளை பயன்படுத்த வேண்டும் பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாட்டினை செயல்படுத்த வேண்டும் என்று பேசினார் மேலும் நிகழ்விற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மக்கும் பைகளை வழங்கினார்...


அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்  மாநிலத் தலைவியாக பொறுப்பேற்றுள் திருமதி.லதா அர்ஜுனன் அவர்களின் சமூக சேவையை பாராட்டியும் 30 ஆண்டு காலமாக அவர் அளித்து வரும் ரத்த கொடை சேவையையும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

முன்னிலை  மற்றும் சிறப்புரையாற்றிய அமைப்பின் மாநில தலைவரும் மூத்த வழக்கறிஞருமான Rtn.N.சுந்தரவடிவேலு அவர்கள் இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியமானது இப்படி பட்ட நிகழ்வுகள் நாம் இந்நிகழ்வுகளுக்கான தினங்களில் மட்டுமே கடை பிடிக்காமல் எல்லா நாட்களிலும் சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் பாதுகாப்பாக வைத்து கொள்ள அனைவரும் முயற்சிகளை எடுக்க வேண்டும் மேலும் தனது சட்ட கல்லூரி படிப்பின் போது தன்னுடன் படித்த சக மாணவர்கள்  அவர்களுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் பொது செயலாளர்  Dr. வி. எச்.சுப்ரமணியம், வாழ்த்துரையும் துணை தலைவர் ஆர்.சிவகுமார் சிறப்புரையயும் மருத்துவர் டி. எஸ். விஜயகுமார் வாழ்த்துரையும் ஆடிட்டர் சி. ஏ. பி. ஞானசுந்தரம் அவர்கள் வாழ்த்துரையும் துணை தலைவர் ஊட்டி தமிழ் வெங்கடேஷ் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் வாழ்க்கையில் அன்றாடம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும் நமக்கும் ஏற்படும் தீமைகளை பற்றியும் மேற்கு தொடர்ச்சி மலையினால் தமிழகம் தொடங்கி மஹாராஷ்டிரா மாநிலம் வரை கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பயன்படாமல் உள்ள நீர்நிலைகளில் குப்பை மற்றும் கழிவுகளை போடாமல் இருக்க வேண்டும் என்றும் பயன்படாமல் உள்ள இடங்களில் இயன்ற வரை ஒரு மரகன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறினார் நிகழ்ச்சியில் அமைப்பின்  கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சுந்தர பாலன் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெயபிரகஷ் வழக்கறிஞர் ஆர். தேன்மொழி வழக்கறிஞர் ஜி. சந்தோஷ் வழக்கறிஞர் வி. தமிழ் செல்வி டாக்டர் ரிஸ்வான் பிரவின் டாக்டர் டி. பரமேஸ்வரன்         ராஜசேகர் ஜான் நிக்கோலஸ்   சபா   ஹரிதாஸ் , இயன்ஸஜோசப்  விஜயராகவன்    தர்மகண்ணன்  ராஜேஷ்குமார் ஜோன்    அஸ்வின்

 ரெயன்    வகிர்அகமது லக்ஷ்மி ரவிபிகாஷ் பானுப்ரியா  விஸ்வநாதன் திரு. ரமேஷ் குமார் திரு. ரவி பிரகாஷ் திரு. சந்தோஷ் பொள்ளாச்சி  திரு. விஜய் ராவ்      ஈரோடு திருப்பூர் கோத்தகிரி திருச்சி மதுரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்பின் மாவட்ட மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மருத்துவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில்  நிகழ்ச்சியில் கலந்து கொணட சிறப்பு விருந்தினர்களுக்கு மரகன்றுகளும் மக்கும் பைகள் வழங்கப்பட்டது மேலும் பார்வையாளர்கள் அனைவரும் மக்கும் பைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்

Post a Comment

0 Comments