// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** வதந்தி பரப்பிய YOUTUBE சேனல் மீது முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கண்டன அறிக்கை

வதந்தி பரப்பிய YOUTUBE சேனல் மீது முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கண்டன அறிக்கை

 திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட  செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தனியார் YOUTUBE  சேனலுக்கு அவரது கண்டத்தை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்‌


தற்பொழுது அதிமுகவில் நடைபெற்றுவரும் ஒற்றை தலைமை பிரச்சனையை திசை திருப்பும் நோக்கில் ஒரு தனியார் (YouTube சேனல்) சேனலில்  திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பற்றி தவறான செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த வதந்தி செய்தியை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் .. 


இல்லையென்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டார்..அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர், இதனை திசை திருப்பும் நோக்கமாக இது போன்று வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். என்று அதிமுக தொண்டர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கேட்டு கொண்டுள்ளார்..

Post a Comment

0 Comments