// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள்  'சட்டமன்ற தொகுதியில் தீர்வு காணமுடியாமல் இருக்கும் பத்து பிரச்சனைகள்'  அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் வழியாக தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வெளியிட்ட அறிவிப்பின் படி மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் நீண்ட கால கோரிக்கையான மாயனூர் தடுப்பணையிலிருந்து நீரேற்று திட்டம் மூலமாக பொன்னனியாறு அணை வழியாக கண்ணூத்து ஏரிக்கு காவேரி நீரை கொண்டு வருவது, 


மணப்பாறை மாட்டு சந்தையை அதிநவீன படுத்தல் உள்ளிட்ட மணப்பாறை தொகுதியின் அதி முக்கிய பத்து கோரிக்கைகளை அடங்கிய கடித தொகுப்பை   தமிழக முதல்வர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழியாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் வழங்கினார்கள்

Post a Comment

0 Comments