// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** திருச்சியில் குறுவட்ட கேரம் போட்டி

திருச்சியில் குறுவட்ட கேரம் போட்டி

 " சி" குறுவட்ட அளவிலான அனைத்து வகை பள்ளி மாணவ மாணவிகளுக்கான கேரம் போட்டிகள் திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.மாணவர்களுக்கான போட்டிகள் 14,17, மற்றும் 19வயதுக்கானது என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.


மாணவர்களுக்கான போட்டிகளை திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை பள்ளி)  திரு.சற்குணம் அவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த மாணவர்களை வாழ்த்தி பேசி தொடங்கி வைத்தார்கள்.



இப்போட்டியில் மொத்தம் 10பள்ளிகள் கேரம் விளையாட்டில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டனர்.14 வயது பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பாலக்கரை உலகமீட்பர் நடுநிலை பள்ளி மாணவர்கள் முதலிடமும் திருச்சி பொன்னையா மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் இராண்டாமிடமும் பெற்றனர்




17வயதுக்குட்பட்ட பிரிவில் ஒற்றையர் பிரிவில் பொன்னையா மேல் நிலைப் பள்ளி முதலிடமும் திருவரங்கம் வைஜெயந்தி வித்யாலயா பள்ளி இராண்டமிடமும் இரட்டையர் பிரிவில் பொன்னையா மேல் நிலைப் பள்ளி மாணவ முதலிடம் மரக்கடை அரசு சையது முர்துசா மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ இரண்டாமிடமும் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒற்றையர் பிரிவில் பொன்னையா மேல் நிலைப் பள்ளி மாணவ முதலிடமும் இரட்டையர் பிரிவில் பொன்னையா மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் முறையே முதலிடமும் சையது முர்துசா மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றார்கள்.இப்போட்டிகளை கேரம் பயிற்சியாளர் Js மகேஸ் அவர்கள் சிறப்பான முறையில் நடத்தினார

நிருபர் JS மகேஷ்


Post a Comment

0 Comments