// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

 திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், இன்று மாநகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை கொண்ட மாமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள். 

இன்று துவங்கிய இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வாய்ப்புக் கோரி பேசத் துவங்கினர்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் புகார் தெரிவித்தும் அவர் திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக பேசி அதிமுக உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்தார்.


இதன் காரணமாக அதிமுக உறுப்பினர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, அனுஷ்யா ஆகியோர் திருச்சி மாநகராட்சி மேயரை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து, திமுகவினரை கண்டித்து வழிநடப்பு செய்தனர்.

இது குறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மற்றும் அம்பிகாபதி ஆகியோர்...



தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து மாமன்ற மாண்பையும் மீறி இழிவாக பேசியதை கண்டித்தும், திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளிக்காமல் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி அதற்கு உறுதுணையாக இருக்கும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினரை கண்டித்தும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments