// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டி

தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டி

திருச்சி தேசியக் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்குமான தனித்தனிப் போட்டிகள் நடைபெற்றன.



கல்லூரிச் செயலர் திருமிகு கா.ரகுநாதன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் திரு ரோட்டரி முருகானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார். 64 அணியினர் இப் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.



 பல்வேறு பள்ளிகள், விளையாட்டு சங்கங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் திரு முருகானந்தம் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் மிகச் சிறப்பாகத் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி அவர்கள் வரவேற்புரை வழங்கிச் சிறப்பித்தார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments