// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதந்திர தின பொதுக்கூட்டம்

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதந்திர தின பொதுக்கூட்டம்

 யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம், பீமநகர் கிளை சார்பாக 76 ஆம் ஆண்டு சுதந்திர தின பொதுக்கூட்டம் UTJ தவ்ஹீத் பள்ளிவாசல் வளாகத்தில் கிளை தலைவர் K.M.அன்சாரி தலைமையில், கிளை செயலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் கிளை பொருளாளர் சேக் அப்துல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் சீமானுக்கும். பாஜகவுக்கும் எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் உரையுடன், சிறப்பு அழைப்பாளாராக மூத்த ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில்வேல், மாநில செயலாளர் அப்பாஸ்அலி, மாநில பொருளாளர் பக்ருதீன், மாநில துணை தலைவர் ரஃபியுதீன், மாவட்ட தலைவர் ராயல் சாதிக், மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் ஷாஹீன், மாவட்ட துணை தலைவர் சதக்கத்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் இனாம்குளத்தூர் சாகுல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் பேச்சு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments