// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டி கல்லூரி மாணவர்கள் பேரணி

விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டி கல்லூரி மாணவர்கள் பேரணி

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் சார்பாக சந்திராயன் மூன்று செயற்கைக் கோளை வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் தரை இறங்கிய விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டும் விதமாக வாழ்த்து பேரணி நடைபெற்றது.


 கல்லூரி முதல்வர் முனைவர் கி குமார் அவர்கள் பேரணியை தொடங்கி வைத்து சிறப்பித்தார். தேசியக் கல்லூரி வளாகத்தில் இருந்து ரயில்வே நிலையம் வரை சென்ற பேரணியானது மீண்டும் தேசியக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. 



தேசிய மாணவர் படை மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கர்கள் சுழற்சங்க மாணவர்கள்  உள்ளிட்ட 500 மாணவ மாணவிகள் இப்பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி அவர்கள் பேரணியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். துணை முதல்வர் முனைவர் இளவரசு மற்றும் பேராசிரியர்கள் பேரணியில் திரளாக பங்கேற்று விஞ்ஞானிகளின் சாதனைகளை போற்றினர்.

 நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments