// NEWS UPDATE *** த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் *** திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் முன்னாள் தலைவர் தர்மராஜ் 11ஆம் ஆண்டு நினைவு தினம் தலைவர் ஆப்ரகாம் தாஸ் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அனுஷ்டிக்கப்பட்டது.

திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் முன்னாள் தலைவர் தர்மராஜ் 11ஆம் ஆண்டு நினைவு தினம் தலைவர் ஆப்ரகாம் தாஸ் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அனுஷ்டிக்கப்பட்டது.

கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் பட்டுக்கோட்டை முன்னாள் தலைவர் ரெவரண்ட் A.தர்மராஜ் 2015ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி கர்த்தர்க்குள் நித்திரை அடைந்தார்.

இதைத்தொடர்ந்து கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் பட்டுக்கோட்டை தலைவர் ரெவர்ண்ட் D.ஆபிரகாம் தாஸ் தலைமையில் முன்னாள் தலைவர் ரெவரண்ட் A. தர்மராஜ்  நினைவு தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


இந்த வகையில் 11ஆம் ஆண்டு நினைவு தினம் ஜூன் 21 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் புனித உத்திரியமாதா கல்லறையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கிருமர சாண்டகிரண் பவுண்டேஷன் பட்டுக்கோட்டை தலைவர் ஆப்ரகாம் தாஸ் தலைமையில், மலம்பட்டி இயேசு அற்புதம் செய்கிறார்' சபை போதகர் சாமுவேல், சொத்து அதிகாரி துரை, செயலாளர் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மெழுகுதிரி ஏற்றி சிறப்பு ஜெபம் செய்தனர். பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த தர்மராஜ் நினைவிடத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


இதன் பின்னர் திருச்சி அருகே மலம்பட்டி கிராமத்தில் உள்ள இயேசு அற்புதம் செய்கிறார் சபையில் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தலைவர் ஆப்ரகாம் தாஸ் தலைமையில் சிறப்பு பிரசங்கம், பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அன்னதானம் செய்யப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் கிரம்மர் சாண்டகிராம் பவுண்டேஷன் பட்டுக்கோட்டை செயலாளர், சொத்து அதிகாரி துரை, பாஸ்டர் சாமுவேல், கிளை போதகர்கள் மரியதாஸ், ஜான் பிரிட்டோ மற்றும் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் பலர் கலந்து கொண்டனர் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை தலைவர் ஆபிரகாம் தாஸ் வழங்கினார்.

Post a Comment

0 Comments