திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோஸப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர்.
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஜெபி (எ) ஜெயராம் பாண்டியன் இத்தொகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு, ஒரு மக்கள் சேவகனாகத் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்.
அரசுத் துறைகளின் உதவியோடும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் திருச்சி கிழக்கு தொகுதியில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முடுக்குபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆபத்தான மின் கம்பத்தை மாற்றி அமைக்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் பழுதடைந்திருந்த சாலை சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகள் சரிசெய்யப்பட்டு, புதிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.



0 Comments