கோயம்புத்தூர்: ஃபேஷன் கலெக்ட்டிவ் கோயம்புத்தூர் சார்பில் நடத்தப்பட்ட குயின் கோயம்புத்தூர் & பிரின்சஸ் கோயம்புத்தூர் 2026 அழகிப் போட்டியின் பிரம்மாண்ட இறுதிச்சுற்று நிகழ்ச்சி கோயம்புத்தூரில் உள்ள மிராய் – மெர்லிஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


பெண்களின் திறமை, தன்னம்பிக்கை, தனித்துவம் மற்றும் ஆளுமை வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்டத் தேர்வுகளை கடந்த போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியின் தலைமை சிறப்பு விருந்தினராக நடிகை ஹன்சிகா மோட்வானி கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு மகுடம் சூட்டி கௌரவித்தார்.

 


ஃபேஷன், அழகு மற்றும் ஆளுமையின் சங்கமமாக அமைந்த இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், ஃபேஷன் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இளம் பெண்களின் கனவுகளையும் சாதனைகளையும் கொண்டாடிய மேடையாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.