BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தமுமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி தமுமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 தமுமுக திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 22.08.2023 மாலை 07.00 மணியளவில் மாவட்ட தலைவர் அ. பைஸ் அகமது கவுன்சிலர் தலைமையில் நடைபெற்றது...இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்‌...

தமுமுக 29 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 25.08.2023 அன்று தமுமுக கொடியை ஏற்றி அரசு தலைமை மருத்துவ மனையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும் 


ஆகஸ்ட் 26 முதல் 31 வரை கிளைகளில் உள்ள தமுமுக கொடிகளை மாற்றியமைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணிகளை துரிதபடுத்த பகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளை கொண்ட குழு அமைப்பது என்றும்,

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக விளையாட்டு அணி சார்பில் செப்டம்பர் மாதம் 03 ம் தேதி கிரிக்கெட் போட்டி நடத்துவது திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் மகளீருக்கான சமூக கருத்தரங்கம் நடத்துவது,

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் சமது, இம்ரான், அப்துர் ரஹ்மான், அசாருதீன், அப்துல் சமது, அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments