// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** காகிதம் எனும் ஆயுதம் தலைப்பில் கருத்தரங்கம்

காகிதம் எனும் ஆயுதம் தலைப்பில் கருத்தரங்கம்

 நூலகம் அறிவுப் புதையல் திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்நாடு மேனால் தலைமைச் செயலர் இறையன்பு பேச்சு திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் நூலகத் தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் அறக்கட்டளை பொழிவு நடைபெற்றது..


தமிழக மேனாள் தலைமைச் செயலர் என்பவர்கள் காகிதம் எனும் ஆயுதம் எனும் தலைப்பில் உரையாற்றினார் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கே குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் வரவேற்புரையில் இறையன்பு அவர்களின் நேர்மையான நிர்வாக திறன் கூர்மையான வாசிப்பு திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தினார் சிறப்பு விருந்தினர்உயர்திரு வே இறையன்பு அவர்களை கல்லூரியின் இணை பேராசிரியர் முனைவர்சா நீலகண்டன் அறிமுகப்படுத்தினார் 

காகிதம் எனும் ஆயுதம் எனும் தலைப்பில் உரையாற்றிய உயர்திரு வெ. இறையன்பு  அவர்கள்மின்னணு கருவிகள் வாயிலாக நூல்களைப் படிப்பது கரும்பை சாறு பிழிந்து குடிப்பது போல புத்தகத்தை நேரடியாக வாசிப்பது கரும்பை கடித்து உண்பது போல அதன் அனுபவம் சுக அனுபவம் ஆனது புத்தகத்தின் நேரடி வாசிப்பு நம்மை வாழ்வியலுக்கு இட்டுச் செல்லும் ஒரு புத்தக வாசிப்பு 100 புத்தகங்களை வாசிக்க அழைக்கும் நூலக வாசிப்பு நம்மை அறிவை விரிவு செய்யும் எல்லோருக்கும் புத்தகங்கள் கிடைப்பதின் மூலம் அறிவை ஜனநாயக படுத்த முடியும் என்ற கருத்துக்களை வழங்கினார் கல்லூரி செயலர் திருமதி கே ரகுநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினரை கௌரவித்தார் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி நன்றி உரை வழங்கினார்.விழா ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் முனைவர் சுரேஷ் குமார் செய்திருந்தார் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

 நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments