// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் மஜக மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பங்கேற்பு

திருச்சியில் மஜக மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பங்கேற்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் M. முகமது செரீப் அவர்கள் கலந்து கொண்டு வருகின்ற 19.09.2024 அன்று  மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்கும் முப்பெரும் விழா குறித்தான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.





இக்கூட்டத்தில் அவை தலைவர் சேக் தாவூத், மாவட்ட துணை செயலாளர்கள் தர்வேஷ், சேக் அப்துல்லா, சுரேஷ் காந்தி மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments