// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் பொங்கல் விழா விளையாட்டு போட்டி அமைச்சர் கே.என்.நேரு பரிசுகளை வழங்கினார்

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் பொங்கல் விழா விளையாட்டு போட்டி அமைச்சர் கே.என்.நேரு பரிசுகளை வழங்கினார்

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் பொங்கல் விழா விளையாட்டு போட்டி அமைச்சர் கே.என்.நேரு பரிசுகளை வழங்கினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி உறையூர் ராமலிங்க நகர் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றது. 

இந்த விழாவில் ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மியூசிக் சேர், பானை உடைத்தல், நடனப் போட்டி, பாட்டுப் போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது

இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா  நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

மேலும் இந்த நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சோபியா விமலராணி , 24 வந்து வட்ட செயலாளர் பிரேம்குமார் , 24 வட்ட பிரதிநிதி சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்..
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை 24 வது வட்ட திமுக நிர்வாகி கமல் மற்றும் RNR சகோதரர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments