NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய இளம்தளிர் புத்தகம் வெளியீடு - திறமைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது

திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய இளம்தளிர் புத்தகம் வெளியீடு - திறமைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது

திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய இளம்தளிர் புத்தகம் வெளியீடு - திறமைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இளம் வாசகர்கள் கிளப் சார்பில் புத்தக வெளியீட்டு விழா பள்ளி  கல்லூரி தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் 15மாணவ, மாணவியர் எழுதிய இளம்தளிர் புத்தகம் வெளியிடப்பட்டது.

 


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீமத்ஆண்டவர் கல்லூரியின் நூலகர் முனைவர் லட்சுமி மற்றும் ரிஷபம் அறக்கட்டளையின் தலைவர் விஸ்வேஸ்வரன் ஆகியோர் புத்தகத்தை  பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் புத்தகத்தை எழுதிய மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள், மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.

நிகழ்வில் பள்ளிசெயலாளர் கஸ்தூரிரங்கன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments