பாலஸ்தீனம் காஸாவில் இன படுகொலை பயங்கரவாத செயலில் ஈடுபடும் இஸ்ரேலை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமையில் போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் பாலத்தீனம் காஸாவில் இன படுகொலை பயங்கரவாத செயலில் ஈடுபடும் இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர்கள் பைஸ் அகமது MC, முகமது ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்.தமுமுக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர்கள் ஹுமாயூன் கபீர், காஜா மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர் கான் மற்றும் மண்டல செயலாளர்கள், மாவட்ட துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், மகளீர் பேரவை நிர்வாகிகள், ஜமாத் தார்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
0 Comments