இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு பெற்று இருக்கும் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களை திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் சந்தித்து வாழ்த்து கூறினர்.
மஜக இளைஞர் அணியின் மாநில செயலாளர் திருச்சி ஷெரிப் அவர்களும், மாவட்ட செயலாளர் பாபு பாய் அவர்களும் அவருக்கு சால்வை அணிவித்தும், மலர் கொத்தினை கொடுத்தும் சிறப்பு செய்தனர்.அப்போது மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் வாழ்த்துக்களையும் கூறி, விரைவில் அவரும் உங்களை சந்திப்பதாக உள்ளார் என்றும் கூறினார்.
இந்த சந்திப்பின் போது மாநில இளைஞர் அணி பொருளாளர் பெரம்பலூர் இம்ரான், மாவட்டத் துணைச் செயலாளர் தர்வேஷ், இளைஞர் அணி செயலாளர் யாசர் ஷெரிப், MJVS மாவட்டச் செயலாளர் ஃபரீத், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் ரபீக் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments