நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் அத்தாட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலையில் நடைபெற்றது.
திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ராஜ்ய சபா சீட்டுக்கான வேட்பாளராக கட்சியின் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் ஊடக பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டத்தில்,2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது
0 Comments