// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** அகில பாரத பார்க்கவகுல சங்கம் சார்பில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அகில பாரத பார்க்கவகுல சங்கம் சார்பில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அகில பாரத பார்க்கவகுல சங்கம் சார்பில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ. டி.பன்னீர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து அகில பாரத பார்க்கவ குல சங்கத்தின் தலைவர் திருமலை ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.


மேலும் திமுக மந்திரி சபையில் பார்க்க உள்ள சமுதாயத்திற்கு எந்த ஒரு பிரதிநிதித்துவமும் வழங்கப்படாத நிலையில்,  பார்க்கவ குல சமுதாயத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஒருவரையாவது அமைச்சராக நியமிக்கவேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொண்டனர்.


பார்க்கவ குல சமுதாயத்தை பல உட்பிரிவுகளாக பிரித்து மைனாரிட்டி சமுதாயமாக மாற்றப்பட்டு இருப்பதை தவிர்த்து பார்க்கவகுலம் என்ற பெயரில் அழைத்திடவேண்டும், மேலும் 10 எம்எல்ஏ, இரண்டு அமைச்சர், 2 நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் என்ற தேர்தல் நிலைப்பாட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் செயலாளர் வைத்தீஸ்வரன்,பொருளாளர் ஆனந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மகளிர் அணி கலைச்செல்வி ரூஷோ பேரவை.கஸ்பர்,லாரன்ஸ், பார்கவன் ஃபேராம் சதிஸ்,சந்திரசேகர்,செல்வமணி,சச்சிதானந்தம்,மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



Post a Comment

0 Comments