// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலை கூடம் சார்பாக 5 வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி

ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலை கூடம் சார்பாக 5 வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி

 திருச்சி உறையூரில் உள்ள சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி யை ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலை கூடம் சார்பாக  நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்,மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியை செ.எழில்மாறன் செல்வேந்திரன் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர். புதுகை ஆயங்குடி சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் அவர்கள், A.நாகலெட்சுமி நம்பி 9 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் K.லட்சுமிநாராயணன் பள்ளி தலைமை ஆசிரியர்  அவர்கள் போட்டியை துவக்கி வைத்தனர். 


மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி  அவர்கள்  கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினார்.  


ஆண்கள் மற்றும் பெண்கள்  சிறப்புப்  பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசான 12000 ரூபாய் ரொக்க பரிசை சிலம்ப ஆசான் அ.குமரேசன் அவர்கள் வழங்கினார்கள்.

Post a Comment

0 Comments