இந்தியாவில் முதன் முறையாக தங்கம் வாங்குவதற்கான பெப்பி கோல்ட் தங்க சேமிப்பு மற்றும் முதலீட்டு புதிய பரிமாணத்தை உருவாக்கும் மொபைல் பயன்பாட்டிலான புதிய செயலியை அறிமுகம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் இணை பங்குதாரராக இமானுவேல்மணி, நிறுவனத்தில் சி இ ஓ அருண்பிரதீப் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தென்னிந்தியாவில் நகைக்கான மதிப்பு அதிகம் உள்ளது. மேலும் விற்பனைக்கான இடமும் உள்ளது. தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்கும் வியாபாரிகளிடையே இருக்கும் பிரச்சனை தொடர்பாக சுமார் 5வருடம் ஆராய்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
இதில் நகை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த செயலி மூலமாக நேரடியாக தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த நிறுவனத்தினர் நேரடியாக வீட்டிற்கு வந்து நகைகளை வழங்கி விடுகின்றனர்.
மேலும் இந்த செயலி மூலம் எந்தெந்த கடைகளில் உங்களுக்கான தங்கத்தின் விலை குறைவு, நகைத் திட்டங்கள் மற்றும் நிறுவனத்தில் அறிவிக்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கும் விதமாக இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் எந்த கடைக்குச் செல்கின்றனரோ அந்த கடையில் பெப்பி கோல்டு வழங்கும் கூப்பனை கொடுக்கும் பொழுது அதற்கான 15மில்லி கிராம் தங்கம் அடுத்த முறை தங்கம் வாங்கும் பொழுது அதனை பெற்றுக் கொள்ளலாம்.
பெப்பி கோல்டு செயலி குறித்து மற்றவருக்கு தெரிவிக்கும் பொழுது அதற்கான சுமார் 10மில்லி கிராம் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து இந்த செயல் மூலம் நகை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல, விற்பதற்கான வழியையும்,
தங்ககாசு. தங்க பத்திரங்கள் வாங்குவதற்கான அத்தனை வழிகளை ஏற்படுத்தியுள்ளோம்.
தற்போது திருச்சியில் துவங்கப்பட்ட இந்த நிறுவனமானது தொடர்ந்து மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்நிறுவனம் துவங்கப்பட உள்ளது.
இது போல் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இச்செயலி மூலமாக இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது நிறுவனம் அமெரிக்க நாட்டில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் தலைமை இடம் உள்ளது.
தற்பொழுது இச்செயலி ஆங்கிலத்தில் உள்ளது. ஒரு மாதங்களில் தமிழிலும் அது செயல்படுத்தி விதமாக வடிவமைக்கப்பட உள்ளது.
வாடிக்கையாளர் சேவை குழு அமைக்கப்பட்டு அந்த குழு மூலமாக வாடிக்கையாளர்களிடம் வாங்கிய நகைகளை குறித்து கேட்டறிய உள்ளோம் என தெரிவித்தனர்.
0 Comments