// NEWS UPDATE *** ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி *** ஆளுநர் விருது பெற்ற உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய சமூக ஆர்வலர்கள்!

ஆளுநர் விருது பெற்ற உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய சமூக ஆர்வலர்கள்!

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்  உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் பணியைப் பாராட்டி தனிநபர் பிரிவில்  ஆளுநர் ஆர்.என்.ரவி விருதினை வழங்கினார்.

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர் விஜயகுமாரை ஒயிட் ரோஸ் பொதுநலச் சங்க தலைவர் முனைவர் சங்கர், சாலை பயனீட்டாளர்  நல அறக்கட்டளை நிர்வாக அலுவலர் அய்யாரப்பன் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Post a Comment

0 Comments