// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். 

நிறுவனர் நாசர் தலைமை வகித்தார். பொருளாளர் தாமோதரன்,அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழகப் பாண்டியன், பிரேம்குமார், முகமது சுபேர், சிவக்குமார் மற்றும் விப்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தலைவர் லால்குடி விஜயகுமார் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில்,1966 இல் தொடங்கப்பட்ட பிஷப் ஹீபர் கல்லூரி, உயர்கல்வி, ஆராய்ச்சி, சமூகப் பொறுப்பு மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியில் ஆற்றி வரும் 60 ஆண்டுகால சிறந்த சேவையைப் பாராட்டி இந்த சிறப்பு அஞ்சல் உறை இந்திய அஞ்சல் துறை மத்திய மண்டலம், தமிழ்நாடு வட்டம் 2026 ஜூன் 24 அன்று ஒரு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. 

வைர விழாவைக் குறிக்கும் வகையிலான ஒரு பிரத்யேக சிறப்பு அஞ்சல் முத்திரையும் அஞ்சல் துறையால் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 2016 ஜூன் 24 அன்று கல்லூரியின் பொன் விழா  மற்றும் கல்லூரி மறுமலர்ச்சி தினத்தை முன்னிட்டு, அப்போதைய போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஜெ. சாருகேசி அவர்களால் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றார்.

Post a Comment

0 Comments