// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களில் இரண்டு படுகொலை ஐவருக்கு வெட்டு....! அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் தலைவர் திருமலை எம்.ரவி பார்க்கவன் அறிக்கை

தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களில் இரண்டு படுகொலை ஐவருக்கு வெட்டு....! அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் தலைவர் திருமலை எம்.ரவி பார்க்கவன் அறிக்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அருகில் உள்ள தென்கடுக்கை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக நாடகம் நடைபெற்ற போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமுதாய போதை இளைஞர்கள் பட்டாக்கத்தி வாள் போன்ற கொடிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதில் மூவர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையிலும் கையில் வெட்டுப்பட்ட நிலையில் இருவர் மதுரை இராஜாஜி மருவமனையிலும் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தனர் .

இந்த சம்பவத்தில் எழுவர் ஈடுபட்ட நிலையில் மூவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் .நால்வர் கைதாகாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதால் அந்த கயவர்களை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மர்ம நபர்களால் கை கால்கள் கட்டப்பட்டு அருகில் உள்ள நீர் நிலையில் சடலமாக கிடந்தார் 


அந்த கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது 


இந்த விவகாரத்தில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து கொலையாளிகளை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 


சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் வெள்ளையூர் ஊராட்சி பெரிய காடு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த கயவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் குற்றவாளிகள் சரணடைந்தனர் என்றாலும்  


தொடர்ச்சியாக பார்க்கவ குல உடையார் மூப்பனார் நயினார் பெருமக்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து பேருக்கு மேல் படுகொலை செய்யப்படுவது எங்கள் இளைஞர்கள் மத்தியில் கடுங்கோபத்தை உண்டாக்கி உள்ளது 


மேலும் மாற்று சமுதாயத்தைச் மக்கள் படுகொலை என்றால் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து கண்டனம் தெரிவிப்பது அதே நேரத்தில் எங்களது பார்க்கவ குல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் கண்டு கொள்ளாமல் செல்லும் போக்கு வருத்தத்தை அளிக்கிறது இனியாவது பாரபட்சம் பார்க்காமல் அரசியல் தலைவர்கள் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 


மேலும் நேற்று காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பாஜகவை எதிர்க்க திமுக வும் தவெக வம் இந்தியா கூட்டணியில் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்கள் கூறி இருந்தார் 


இதற்கு உதாரணமாக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவில் எதிரெதிர் திசையில் பயணித்தாலும் பாஜக எதிர்ப்பில் ஒன்றாக உள்ளது 


அதுபோல திமுக தவெக ஒன்றாக பயணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் 


தேர்தலுக்கு முன் ஆர் எஸ் எஸ் ன் பிள்ளை தமிழக வெற்றிக் கழகம் என்று கூறிவிட்டு பின்னர் அவர்களுடன் மந்திரி சபையில் பங்கெடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு குடைச்சல் கொடுப்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரி போல் அனைத்திற்கும் கருத்து கூறுவது வாடிக்கையாகிவிட்டது 


ஆனால் நான் கேட்கிறேன் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து பயணிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலியுறுத்திய போது 


நாங்கள் பாமக இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது மாற்றிப் பேசுவது அவருடைய இரட்டை நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகியுள்ளது

முதலில் இவர் பாமக வுடன் இணைந்து பயணிக்கட்டும்

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அணி மாறுவது தான் எடுத்த நிலைப்பாட்டை தானே மீறும் வகையில் செயல்பட்டு வருவது தமிழ்நாட்டின் சாபக்கேடு


இவ்வாறு அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் தலைவர் திரு திருமலை எம் ரவி கூறினார்

Post a Comment

0 Comments