திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள MIET பொறியியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் கல்லூரி தலைவர் முகமது யூனுஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆந்திரபிரதேச மாநிலம் ஆனந்த்பூர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சுதர்சனராவ் கலந்து கொண்டு உரையாற்றினார்
அப்போது பட்டமளிப்பு விழா என்பது முடிவல்ல மாணவர்களாகிய உங்களுடைய வளர்ச்சியின் ஆரம்பம். மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்துக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். தான் செய்யும் வேளையில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் எங்கு சென்றாலும் தான் வந்த பாதையை மறக்க கூடாது. குறிப்பாக தான் கல்விகற்ற நிறுவனம் மற்றும் தன் பெற்றோர்கள் உறவினர்கள் அவைவரையும் ஒருபோதும் மறக்க கூடாது. மேலும் மாணவர்கள் தங்களின் நெறிமுறைகளையும் பாரம்பரியத்தையும் எங்கே சென்றாலும் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நீங்களே நாளைய தலைவர்கள் மற்றும் நாளைய உலகில் என்னவற்றை விட்டுவிட்டு செல்ல போகிறார்கள் என்று இந்த உலகம் உற்றுப்பார்த்துக் கொண்டு இருக்கும் என பேசினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 275 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.






0 Comments