திருச்சிராப்பள்ளி அறம் லயன்ஸ் சங்க துவக்க விழா திருச்சி ஏடிஆர் கார்டன் ஜாய் விஸ்டா ரிசார்ட் வளாகத்தில் நடைபெற்றது. மணிகண்டம் லயன்ஸ் சங்க தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலர் தங்கவேல், மகேஸ்வரன், பொருளாளர் துரைராஜ், ரமேஷ், துணைத் தலைவர் காட்வின் தாசன், திருப்பதி, உறுப்பினர் வளர்ச்சி தலைவர் நீலகண்டன், மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், சேவை திட்டங்கள் தலைவர் அபுபக்கர் ராஜா ,சிங்காரவேலு, நவீன் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல் புதிய சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட முதல் துணை ஆளுநர் ஸ்டாலின் புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரையாற்றினார். இ வேஸ்ட் கலெக்க்ஷன் மாவட்ட தலைவர் மகேந்திரன் சேவை திட்டங்களை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட அவை செயலர் சசிதரன், மாவட்ட அவை பொருளாளர் எழிலரசி ரவி, இ செகரட்டரி சரவணபெருமாள், கலை சமூக செயல்பாடு தலைவர் ரவிச்சந்திரன், இலக்கு ஊக்குநர் சரவணக்குமார், விரிவாக்க தலைவர் செந்தில்குமார், முருகேசன், மினியாஸ் ,பரணி குமார், மண்டல தலைவர் லோகநாதன், மாவட்ட செயற்குழு அலுவலர் நடராஜன், பாலமுரளி, நாகராஜன், கணேஷ், மதுரா ரவி, சகாய விஜயராணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சிராப்பள்ளி அறம் லயன்ஸ் சங்க சாசனத்தலைவர் தேவராஜ் ஏற்புரையாற்றினார். வட்டாரத் தலைவர் சரவணன்,திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் ஹேமலதா சாசன செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், இந்திரா கணேசன் லயன்ஸ் சங்க தலைவர் மருத்துவர் லதா உட்பட பலர் அறம் லயன்ஸ சங்க சாசனத் தலைவர் தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக மணிகண்டம் லயன்ஸ் சங்க சாசனத்தலைவர் தங்கவேலு வரவேற்க, நிறைவாக அறம் லயன்ஸ் சங்க செயலாளர் ராஜா நன்றி கூறினார்

0 Comments