தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் சரவணன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறுசீரமைப்பு SSA-2 தலைவர் ராகுல் காந்தி எண்ணத்திற்கு நேர் மாறாகவும் திருச்சி மாவட்டத்தின் உண்மை காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணத்திற்கு நேர் மாறாக மாநிலங்களவை உறுப்பினர் திரு கிறிஸ்டோபர் திலக் அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாவட்டத் தலைவர் ரெக்ஸ்க்கு ஆதரவாக செயல்படும் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்படுவதால் மாற்றி விட்டு புது பொறுப்பாளர்களை நியமித்து கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அமைதி வழியில் கவனம் ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் செய்தோம் ஆனால் எங்களது கோரிக்கையை ஏற்காமல் திட்டமிட்டபடி தேர்தலை விருப்ப மனுவை பெறுவதாக தெரிய வருகிறது.இந்தப் தேர்தல் பார்வையாளர்களை வைத்து தேர்தல் நடத்தினால் எம்.பி கிறிஸ்டோபர் திலக் ஆதரவாக தான் செயல்படுவார்கள் ஆகையால் இந்த தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம். காரணம் எங்களுக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட எந்தவித வாக்காளர் பட்டியல் வழங்கப்படவில்லை .
ஆனால் மாவட்ட தலைவர் அவர்களுடைய நிர்வாகிகளுக்கு முன்பே அனைத்து தேர்தல் வழிமுறைகளையும் வாக்காளர் பட்டியலையும் கொடுத்துவிட்டு இரண்டு நாட்களில் விருப்பமனு பெறப்படும் என மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அறிவித்துள்ளார்.
எனவே இந்த பொறுப்பாளர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே இந்த தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் எப்பொழுதும் போல நமது தலைவர் வருங்கால பிரதமர் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவது தான் எங்களது லட்சியம்..
அந்த லட்சியத்தில் தொடர்ந்து பயணிப்போம் என்பதை தெரிவித்துக் கொண்டு SSA-2 தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் கடந்த SSA-1 மாவட்ட தலைவர் தேர்தலில் கடந்த 3 வருடங்களாக மாவட்டத் தலைவராக இருந்து வரும் ரெக்ஸ் மாவட்டத்தின் 65 வார்டுகளுக்கு வார்டு தலைவர்களை பூர்த்தி செய்ய முடியவில்லை அப்படிப்பட்டவரை மாநிலங்களவை உறுப்பினர் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் தனது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் இவருக்கே அதாவது ரெக்ஸ் என்பவருக்கு பெற்று தந்தார்.
அதேபோல் இதிலும் தொண்டர்கள் பாதிப்பார்கள் என்பதால் தான் இந்த தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூருக்கு வழக்கறிஞர் சரவணன் கடிதம் எழுதி உள்ளார்


0 Comments