திருச்சி அண்ணாமலை நகரில் விஸ்டீரியா ப்ளூம் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா நடைபெற்றது
திருச்சி முன்னணி ரயில் எஸ்டேட் டெவலப்பர் சாமி குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள விஸ்டீரியா ப்ளூம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை வீட்டு உரிமையாளர்களிடம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.
5 சொகுசு அடுக்குமுாடி குடியிருப்புகளில் மொத்தம் 100 வீடுகளுடன், 2 கிளப் ஹவுஸ்கள், சூப்பர் மார்க்கெட், மல்டி பர்பஸ் ஹால், மினி தியேட்டர், 2 பேட்மின்டன் கோர்ட், நீச்சல்குளம், உடற்பயிற்சி கூடம், யோகா அறை, கிரிக்கெட் டாப் கோர்ட், நடை பயிற்சி தளம், குழந்தைகள் உள், வெளி விளையாட்டு பகுதி, கார் பார்க்கிங் உள்ளிட்டபல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 2, 3,4 படுக்கை அறை வசதிகளுடன் தனித்தனி குடியிருப்பு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரமேஷ், பர்வேஸ் ராஜ்குமார், எம்எல்ஏக்கள் கதிரவன், விக்னேஷ், நவல்பட்டு விஜி, முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொது செயலாளர் கோவிந்தராஜூலு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்தவர்களை சாமி குழும நிர்வாக இயக்குனர் இளமுருகுன், இயக்குனர் தேன்மொழி, மித்ரஜித், சன்ஜித், லக்ஷா விராலிமலை யூனியன் முன்னாள் சேர்மன் சின்னசாமி ஆகியோர் வரவேற்றனர்.


0 Comments