NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கருவேல மரங்களை அகற்ற கோரி திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கருவேல மரங்களை அகற்ற கோரி திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கருவேல மரங்களை அகற்ற கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருவேலமரத்தின் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்



மேகதாதுவில் காவேரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்பட்ட ஏரி, குளங்கள் மற்றும் ஊரணிகளில் மண்டிக்கிடக்கும் கருவேல முள் செடிகளை அகற்ற முதலமைச்சர் உத்தரவிட வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் இது குறித்து இச்சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் கூறுகையில்... தமிழகம் முழுவதும் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் ஏரி குளங்கள் ஊரணிகள் என 25 ஆயிரம் உள்ளன இந்த ஏரி குளங்களில் ஊர் அணிகளில் வேலிக் கருவை முள் செடிகளும் காட்டாமணக்கு செடிகளும் வெங்காயத் தாமரை அதிகமாக காணப்படுகிறது எனவே வரும் கோடை காலங்களில் இவர்களை மழைக்கு முன்பாக வேரோடு அழிக்க வேண்டும் மேலும் யூனியன் ஏரிகள் குளங்கள் ஊரணிகள் இவைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கரையை பலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் உடனடியாக தமிழக அரசு நீதிமன்றத்தின் மூலம் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.


Post a Comment

0 Comments