// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** விஜய் படத்தை டாட்டூவாக வரைந்த டாட்டூ ஓவியர் கோடிக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாராட்டு

விஜய் படத்தை டாட்டூவாக வரைந்த டாட்டூ ஓவியர் கோடிக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாராட்டு

திருச்சி குமார வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் என்ற பெயரில் திருமண மண்டபத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


முன்னதாக திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள பிரபல "ஒய் ஒய்" டாட்டு ஸ்டுடியோவின் உரிமையாளரான டாட்டு ஓவியர் கோடி என்பவர் கடந்த மாதம் வெளியிடப்பட்ட பீஸ்ட் திரைப்படத்தின் நடிகரும், விஜய் மக்கள் இயக்க தலைவருமான தளபதி விஜயின் புகைப்படத்தை விஜய் ரசிகரான ராஜ் பாரதி என்பவரின் முதுகில் 16-மணி நேரத்தில் வரைந்தார். அதற்கு பாராட்டு தெரிவித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டாட்டு ஓவியர் கோடிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் திரைப்பட நடிகர் விஜய் அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.



குறிப்பாக திரைப்பட நடிகர் விஜய்யின் உருவத்தை வரைந்த டாட்டு ஓவியர் கோடியிடம் பிரபல நடிகர்களான அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்கள் அவர்களின் உருவப்படத்தை வரைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments