தமிழக முதலமைச்சர் விஜய், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஆகியோருக்கு தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் தலைவர் கமலக்கண்ணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியோடும் நேரடியாகத் தொடர்புடைய மிக முக்கியமான துறை ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையாகும்.
இத்துறையானது இலட்சக்கணக்கான இன்ஜினியர்கள், புரமோட்டர்கள், நில வணிகர்கள், நில முகவர்கள் மற்றும் கொத்தனார்கள்..தின கூலி ஆட்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருகிறது.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், இத்துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் வீடு மற்றும் நிலங்கள் கிடைக்கவும் வழிவகை செய்யும் வகையில் பின்வரும் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்:
அரசுத்துறை ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், நேர்மையான முறையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியும் பதிவும் பெற்றுள்ள யார் வேண்டுமானாலும் இப்பணிகளில் பங்கேற்கலாம் என்ற இந்த வெளிப்படையான அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதுடன், அரசின் நிதிநிலையைப் பாதுகாப்பதற்கும் உதவியாக அமைகிறது.
அத்துடன் தமிழ்நாடு அரசின் வளர்ச்சித் திட்டங்களான வீட்டுவசதி, நகர்ப்புற , நில மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் இத்திட்டங்களுக்காக அறிவிக்கப்படும் ஒப்பந்த பணிகளில் தகுதியும் அனுபவமும் கொண்ட தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் உறுப்பினர் நிர்வாகிகளுக்கும் சம வாய்ப்புடன் பங்கேற்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் அரசுடன் இணைந்து தரமான சேவையை வழங்க எங்கள் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளனர்.
முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் வழிகாட்டு மதிப்பு (Stamp Duty & Guideline Value):
தமிழகத்தில் நிலம் மற்றும் மனைப் பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களைக் குறைப்பதன் மூலம், பொதுமக்களுக்குச் சுமை குறைவதுடன், அரசாங்கத்திற்குரிய வருவாயும் பெருமளவில் அதிகரிக்கும்.
வழிகாட்டு மதிப்பை (Guideline Value) சந்தை நிலவரத்திற்கு ஏற்ப யதார்த்தமான முறையில் நிர்ணயிக்கவும், அடிக்கடி தன்னிச்சையாக உயர்த்தப்படுவதைத் தவிர்க்கவும் உரியக் குழுவை அமைக்க வேண்டும்.
மனைப் பிரிவு அங்கீகார நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் (DTCP / RERA/ CMDA Approval Process):
நிலம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான (DTCP /RERA/ CMDA) இணையவழி அங்கீகார அனுமதிகள் மற்றும் பிளான்கள் வழங்கும் நடைமுறைகளில் உள்ள காலதாமதத்தைத் தவிர்க்க, காலக்கெடுவை (Time-bound processing) கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
சிறு மற்றும் நடுத்தர புரமோட்டர்கள் எளிதில் அனுமதிகள் பெறும் வகையில் ஒற்றைச்சாளர முறைக்கு (Single Window System) கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும்.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல்:
சிமெண்ட், கம்பி (Steel), செங்கல் மற்றும் மணல் உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டுமானப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வது நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவைப் பாதிக்கிறது. எனவே, விலை உயர்வை முறைப்படுத்தவும், தடையற்ற மணல் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நேரடித் தலையீடு செய்ய வேண்டும்.
நில முகவர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு நலவாரியம்:
அமைப்புசாரா தொழிலாளர்களாகக் கஷ்டப்படும் நில முகவர்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பிற்காகச் "சுயதொழில் செய்யும் நில முகவர்கள் நலவாரியம்" ஒன்றை அமைத்து, அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
கொத்தனார்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் காப்பீடு:
தினசரி கட்டுமானப் பணிகளை நம்பியுள்ள இன்ஜினியர்கள், கொத்தனார்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீடு மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தி, தொழிலாளர் நல வாரியத்தின் உதவிகள் எளிதில் சென்று சேர உரிய வழிவகை செய்ய வேண்டும்.
வங்கிக் கடன் மற்றும் நிதி உதவி (Easy Bank Loans & Lower Interest Rates):
நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் சொந்தமாக வீடு கட்டும்போதும், மனை வாங்கும்போதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், அதற்கான ஆவணச் சரிபார்ப்பு முறைகளை எளிமைப்படுத்தவும் உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
சொத்து வரிகள் மற்றும் அங்கீகாரக் கட்டட வரன்முறைப்படுத்துதல் (Property Tax & Regularization):
கட்டடங்கள் மற்றும் நிலங்களின் மீதான சொத்து வரி உயர்வைச் சீரமைக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் புரமோட்டர்கள் தங்களது நிலங்கள் மற்றும் பழைய கட்டடங்களை எளிதில் வரன்முறைப்படுத்திக் கொள்ள (Regularization) கால அவகாசத்துடன் கூடிய எளிய நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும்.
சொத்துப் பரிமாற்றங்களுக்கான சட்டப் பாதுகாப்பு (Legal Protection for Real Estate Transactions):
நில மோசடிகளைத் தவிர்க்கவும், பதிவுத்துறையில் முறைகேடுகளைத் தடுக்கவும் நவீன தொழில்நுட்பப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். அதேசமயம் நேர்மையாகத் தொழில் செய்யும் நில முகவர்கள் மற்றும் புரமோட்டர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளைத் தாங்கள் கனிவுடன் பரிசீலித்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு, இத்துறையையும் இத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களையும் காப்பாற்றுமாறு தமிழக அரசை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நீர்ப்பிடிப்பு நிலங்கள் மற்றும் சதுப்புநிலங்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கருதி அரசு பல்வேறு ஆய்வுகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியிலும் நீர் பிடிப்பு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது முந்தைய திமுக அரசு மேலும் பசுமை பூங்காவை அழித்து ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டப்பட்டு வருகிறது இது முற்றிலும் பள்ளத்தாக்கான நீர் நிலை பகுதி என்பது குறிப்பிடத்தக்கது
வேகமாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நில மேம்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அப்பகுதியில் உள்ள நிலங்கள், இயற்கை நீர்வழிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் வெள்ள அபாயம் தொடர்பாகவும் அரசு அறிவியல் அடிப்படையிலான ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்

0 Comments