// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** தமிழகத்தில் முதன்முறையாக மறுவாழ்வு முகாம் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கி CFTUI அசத்தல்

தமிழகத்தில் முதன்முறையாக மறுவாழ்வு முகாம் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கி CFTUI அசத்தல்

சுதந்திர இந்திய தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு (CFTUI) தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு (TUPF) இணைந்து, பரணி தீபம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் மூலம், கடந்த வாரம் தென்பள்ளிப்பட்டு மறுவாழ்வு முகாமில் தொழிலாளர் நலவாரியப் பதிவு நடைபெற்றது.

 பதிவுநடைபெற்ற தொழிலாளர் நலவாரியப் பதிவின் தொடர்ச்சியாக, 15 தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் முதன்முறையாக நமது CFTUI தொழிற்சங்கத்தின் மூலம் தொழிலாளர் நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டனர் 

கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உரிய நலத்திட்டப் பயன்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே நமது CFTUI தொழிற்சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.


இந்த முயற்சிக்கு தொடர்ந்து உந்துதலாகவும், வழிகாட்டுதலாகவும் இருந்து ஒத்துழைப்பு வழங்கிய

🙏 தொழிலாளர் துறை  உயர் அதிகாரிகள்

🙏 மறுவாழ்வுத்துறை உயர் அதிகாரிகள்

🙏 மாவட்ட தொழிலாளர் துறை அதிகாரிகள்

🙏 மாவட்ட முகாம் தனி வட்டாட்சியர் அவர்கள்

🙏 தமிழ்நாடு யூனிசர் நிறுவன தலைமை இயக்குனர் வலன் சார் அவர்கள்


ஆகிய அனைவருக்கும் CFTUI – தமிழ்நாடு சார்பிலும், தொழிலாளர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் 


Post a Comment

0 Comments