திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான நுண்களை போட்டி விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அருட்தந்தை ஜார்ஜ் அரங்கத்தில் கல்லூரியின் செயலர் அருள்பணி லூயிஸ்பிரிட்டோ தலைமையில், முதல்வர் முனைவர் உமாமகேஸ்வரி முன்னிலை நடைபெற்றது.
இவ்விழாவில் கலை வழி சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செவ்வியல் நடனம், செவ்வியல் குரலிசை, மெல்லிசை குரலிசை, கருவியிசை, தாளக்கருவியிசை, ரங்கோலி, வண்ண ஓவியம் தீட்டுதல், நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புற நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.இதில் பல்வேறு கல்லூரியில் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.சிறப்பு விருந்தினராக ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மருத்துவர் கோவிந்தராஜன் கலந்துகொண்டு சிறப்புரையற்றினார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழல் கோப்பை, கேடயம், பரிசுத்தொகையுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நடைபெற்ற போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் இடத்தை ஜோசப் கல்லூரி மாணவ மாணவிகளும், இரண்டாம் இடத்தை சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி மாணவ மாணவிகளும் பெற்றனர்.
இந்நிகழ்வை குழு தலைவர் சதீஷ்குமார் மற்றும் வேங்கடலட்சுமி, லட்சுமி, அபர்ணா, ஜோசப்பேட்ரிக் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.






0 Comments