மிக பிரம்மாண்டமாக திருச்சி மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில், புதிய முகவரியை வரவேற்க TVS Tollgate அருகில் சுமார் 1,20,000 சதுர அடியில் 4 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் உயர்தரமான மிகவும் குறிப்பிட்ட டிரண்டிங் டிசைன்களோடு மற்ற நிறுவனங்களோடு போட்டி போடக்கூடிய எக்கனாமிக் விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி தென்னிந்தியாவில் வெற்றிகரமாக செயல்ப்பட்டு வரும் தி சென்னை சில்க்ஸ்-ன் 25-வது ஷோருமாகும் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் 53-வது ஷோருமாகும்.
இந்த நிறுவனத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில் இந்த பிரம்மாண்டமான ஷோருமில் திருமணம் மற்றும் சிறப்பு நிகழ்சிகளுக்கு பட்டும் பவுனும் ஒரேஇடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் அணிந்து கொள்ளவும் ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட சேலைகள், பெண்கள், ஆடவர் மற்றும் குழந்தைகளுக்கான துணி வகைகள், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மற்றும் வைர நகைகள் அனைத்தும் இங்கு ஒரே கூறையின் கீழ் கிடைக்கும். இதனால் திருச்சியில் 2-வது கிளையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் ஷோரும் ஒரு குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்து கொள்ளும் இடமாக திகழும். வித்தியாசமான மற்றும் மகிழ்ச்சியான ஷாப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் திருச்சியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஷோரும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் கூறினர்.
தி சென்னை சில்க்ஸ் குறித்து..,
தமிழகத்தில் BIS சான்றிதழை முதன் முதலில் பெற்ற நிறுவனமாகும். தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைர நகைகள் மற்றும் உயர்தரமான கற்களால் செய்யப்பட்ட அழகிய நகைகளை உள்ளடக்கிய ஸ்ரீ குமரன் தங்க மாளிகை தரத்திற்கும் தூய்மைக்கும் புகழ் பெற்றதாகும். இந்த குழுமம் நூற்பாலை, நெசவு, பனியன் மற்றும் அனைத்து வகை ஜவுளி பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. 30-க்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு தங்களது பொருட்களை இக்குழுமம் ஏற்றுமதி செய்கிறது.
இக்குழுமத்தின் மிக முக்கியமாக திகழும் மற்றொரு அங்கம் "TEEMAGE PRECAST IN" என்ற உயர்தரமான கட்டுமான நிறுவனமும் உள்ளது.
பல வெற்றிகரமான குழுமம் என்பது தவிர சமூகப்பொறுப்பு கொண்ட தனியார் நிறுவனமும் ஆகும். சுற்றுசுழல் பாதுகாக்கும் வகையிலும் தனக்கு தேவைப்படும் கணிசமான மின்சாரத்தை பெறுவதற்காக காற்றாலைகளையும் இக்குழுமம் நிறுவியுள்ளது. சூரிய சக்தி மூலம் 8 மெகாவாட் மின்சாரத்தையும் இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.சமூக மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக திருப்பூரில் CBSE பள்ளியையும், உயர்தரமான ஏழை மக்கள் பயன்படும் படி மருத்துவமணையையும் இந்த குழுமம் நடத்தி வருகிறது. புகழ் பெற்ற ஒவியர் ராஜா ரவிவர்மா வரைந்த 11 ஓவியங்களின் சிறப்பம்சங்களை பட்டு புடவைகளில் கொண்டு வந்ததிற்காக கின்னஸ் மற்றும் சாதனை புத்தகத்தால் அங்கீகாரம் பெற்ற குழுமாகும்.





0 Comments