LIONS PORTAL பயிற்சியானது திருச்சி என்டிஆர் ஜாய் விஸ்டா ரிசார்ட் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சரவணபெருமாள் Lions Portal பயிற்சி குறித்து பேசுகையில், லயன்ஸ் போர்ட்டல் என்பது லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆகியோர் Lions Portal தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்துவதாகும்.நடப்பாண்டு நிகழ்வினை பதிவு செய்தல் ஆகும்.
உறுப்பினர் விவரங்களைப் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்,சங்கக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பதிவு செய்தல்,சேவைத் திட்டங்களை பதிவேற்றம் செய்தல்,சேவை அறிக்கைகளை சமர்ப்பித்தல்,உறுப்பினர் வருகை மற்றும் சங்க செயல்பாடுகளை நிர்வகித்தல்,சங்கத்தின் செயல்பாடுகளை ஆன்லைனில் முறையாகப் பராமரித்தல்போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்வில் விரிவாக்க தலைவர் செந்தில்குமரன்,வட்டார தலைவர் சரவணன்,லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் தலைவர் ஹேமலதா,செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், இந்திரா
கணேசன் லயன்ஸ் சங்க தலைவர் மருத்துவர் லதா, மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம் தலைவர் ரகுபதி, செயலர் சிவராமன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 Comments