// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** எம் ஆர் எப் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு: நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் ஜெ.பி. வரவேற்பு .

எம் ஆர் எப் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு: நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் ஜெ.பி. வரவேற்பு .

எம்.ஆர்.எப். (MRF) நிறுவனத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான நியாயமான சம்பள உயர்வு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, நிறுவனம் ரூ.10,000 சம்பள உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இச்செய்தி தொழிலாளர் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு ஆரம்பம் முதலே நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் எந்தவித பின்வாங்குதலும் இன்றி முழு ஆதரவு அளித்து, தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த மகத்தான வெற்றி குறித்து நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஜெபி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- 


உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் உறுதியுடன் களத்தில் நின்று போராடிய அனைத்து தொழிலாளர் சங்கங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற காரணமாக இருந்த அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தொழிலாளர்களின் உரிமையே எங்கள் முன்னுரிமை; உழைப்பின் மதிப்பை நிலைநாட்டும் போராட்டத்தில் என்றும் உறுதுணையாக இருப்போம் என நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஜே பி  வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



இந்த வெற்றி கிடைக்க 24 மணி நேரமும் செயல்பட்ட நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆசை தம்பி, பெரம்பலூர் மாவட்ட பொது செயலாளர் வசந்த், மாநில இணை அமைப்பாளர் செந்தில் உறுதுணையுடன் மாநில அமைப்பாளர் பெத்தணசாமி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் சுதா நாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளார் .

Post a Comment

0 Comments