// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** திருச்சியில் பெரியார் சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

திருச்சியில் பெரியார் சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஜங்ஷன் பகுதி செயலாளர் ஜிம் செல்வம் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்விற்கு கழக தலைமை நிலைய செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான தொட்டியம் ராஜசேகரன் தலைமை வகித்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 



மேலும் இந்த நிகழ்வில் அமமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் சிறுபான்மை பிரிவு செயலாளர் கமுருதீன், அமைப்புச் செயலாளர் எம்.எஸ். ராமலிங்கம், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் தனசிங், திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சாகுல் அமீத், கழக பொறியாளர் அணி செயலாளர் என்.எஸ். தருண், நெல்லை லட்சுமணன், ஆனந்தராஜ், வண்ணை லதா, கதிரவன், மகாலட்சுமி, கல்நாயக் சதீஷ்குமார், மலைக்கோட்டை சங்கர், நூறுமுகமது, அழகர்சாமி, முத்துக்குமார், முருகன், ஆறுமுகம், கமலா தங்கராஜ், லோக்நாத் லோகு, தங்கமணி, ராகவன், சந்திரசேகர், வெங்கடேஷ், மணிமாறன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Post a Comment

0 Comments