// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** தமிழகத்தில் அறநிலையத்துறை அறநிலைய அபகரிப்பு துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது திருச்சியில் பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி

தமிழகத்தில் அறநிலையத்துறை அறநிலைய அபகரிப்பு துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது திருச்சியில் பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அஸ்வதாமன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:



"உலகின் சக்திவாய்ந்த தலைவரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத தேசம் முழுவதும் மாலை நேரங்களில் ஆசீர்வாத தீபம் ஏற்றி வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

விவசாயிகளுக்கு பா.ஜ.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இன்று தமிழகத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தமிழக அரசு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்குப் பந்தல் கூட அமைக்க அனுமதி அளிக்காமல் தமிழக அரசு உள்ளது. சட்டபூர்வமாகப் போராடும் விவசாயிகளைத் தடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் விவசாயிகள் குறித்து பல்வேறு திரைப்படங்களில் பேசியுள்ளார். ஆனால், நிஜத்தில் பந்தல் அமைக்கக் கூட அனுமதி மறுக்கிறார். எனவே, முதல்வர் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.


முதல்வர் விஜய் லண்டனுக்கு முதலீட்டை ஈர்க்கச் சென்றதுபோலத் தெரியவில்லை. அவர் இதுபோன்ற பயணங்களைத் சொந்தச் செலவில்தான் மேற்கொள்ள வேண்டும். இதேபோல மேட்டூருக்கு முதல்வர் சென்றதற்கு ஆன செலவு ரூ.6 கோடி. இந்தச் செலவை நெல் கொள்முதல் நிலையத்திற்குச் செலவிட்டிருக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் ரேஷன் கடைக்கு விற்பனைக்கு வரும்போது நாத்தமடித்துப் போகிறது. பாண்டியர்களின் சின்னமாக உள்ள மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தைக் கூட சரியாகச் செய்யவில்லை.  இங்கோ பக்தர்களுக்குத் தீர்த்தம் கூட வழங்க முடியவில்லை. எனவேதான், கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அறநிலையத்துறை, 'அறநிலைய அபகரிப்புத் துறை'யாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments