// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தலைமை செயலகம் நோக்கி நடை பயணம்...!தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு

தலைமை செயலகம் நோக்கி நடை பயணம்...!தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம். சரீப் கலந்து கொண்டார். கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 75 வது சுதந்திர தினத்தை ஒட்டி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களுடன் 15 நாட்கள் பெருந்திரள் நடைபயணமாக சென்று முதலமைச்சரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.


 ஆலோசனைக் கூட்டத்தில்  மாவட்ட துணைச் செயலாளர் காஜா,மேற்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா,மாவட்ட இளைஞரணி சேக் ,ஆழ்வார்தோப்பு துணைச் செயலாளர் முபாரக்,சமயபுரம் பகுதி செயலாளர் பாருக், மற்றும் பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments