BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ஆத்மா மருத்துவமனை சார்பில் மனநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது

ஆத்மா மருத்துவமனை சார்பில் மனநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது

மனநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும்நோக்கில் திருச்சி ஆத்மா மனநல மையம் சார்பில் குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இதனை இன்று தில்லைநகர் அருகே உள்ள இந்திய மருத்துவ மன்றத்தில்  வெளியிட்டனர். இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.


இதுகுறித்து தென்மண்டல மனநல மருத்துவர் சங்கம்,தலைவர்,டாக்டர்.ராமகிருஷ்ணன் கூறுகையில்..,மனநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும்நோக்கில் குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இதில் 42 படைப்புகள் வரப்பெற்று 5 குறும்படங்கள் தேர்வுசெய்யப்பட்டு அதில் சிறந்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு செல்பி திரைப்பட இயக்குநர் மற்றும் தென்மண்டல மனநலமருத்துவர் சங்கதலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முதல் 3 சிறந்த குறும்படங்களை தேர்வுசெய்தனர். இந்த குறும்படங்கள் யாவும் யூடியூப் மற்றும் வலைதளங்கள் மூலமாகவும், அரசாலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதன்வாயிலாக மக்களுக்கு இந்நோய்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதுபோல மனநோயாளிகளுக்கும் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.  உலகத்தில் அதிகளவு தற்கொலை நடைபெறும் நாடு இந்தியாதான எனவும் மனநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என கூறினார்.

இந்நிகழ்வில் திமுக தில்லைநகர் பகுதி செயலாளர் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் விஜயலட்சுமி கண்ணன், முத்துக்குமார் மற்றும் மருத்துவர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்

Post a Comment

0 Comments