// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம்

திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம்

தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மற்றும் பழைய கோவில் கத்தோலிக்க சங்கம் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாமை திருச்சி எடத்தெரு பழைய கோவில் வளாகத்தில் இன்று நடத்தியது. இந்த முகாமிற்கு பழைய கோவில் பங்கு தந்தை அந்தோணி சாமி ஆசியுறை வழங்கினார். திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜர் மற்றும் உதவி பங்கு தந்தை சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு விருந்தினராக மண்டலம் 2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா கலந்து கொண்டார். முன்னதாக கத்தோலிக்க சங்க தலைவர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றிட, சங்கத் தலைவர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். இந்த இலவச சித்த மருத்துவ முகாமில் தர்ம நாதபுரம், இருதயபுரம், மல்லிகைபுரம், அன்னை நகர், மரியம் நகர், படையாச்சி தெரு, எடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.



இந்த இலவச சித்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பழைய கோவில் கத்தோலிக்க சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்

Post a Comment

0 Comments