// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி ரைபிள் கிளப் மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் நான்கு பிரிவுகளில் தங்க பதக்கமும், இரண்டு பிரிவுகளில் வெண்கல பதக்கம்

திருச்சி ரைபிள் கிளப் மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் நான்கு பிரிவுகளில் தங்க பதக்கமும், இரண்டு பிரிவுகளில் வெண்கல பதக்கம்

 திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கியை சுடும் போட்டியில் நடிகர் அஜித் நாலு தங்கம் இரண்டு வெண்கல பதக்கம் வென்றார்.. திருச்சியில் 47வது மாநில அளவினால் துப்பாக்கி சூடு போட்டி திருச்சி மாநகர் கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. சிறியவர் முதல் இளைஞர்கள் முதியவர் என தரம் பிரிக்கப்பட்டு சப் யூத் 16 வயது வரை யூத் 19 வயது வரை ஜூனியர் 21 வயது வரை சீனியர் 21 முதல் 45 வயது வரை மாஸ்டர் 45 வயது முதல் 60 வயது வரை சீனியர் மாஸ்டர் 60 வயதுக்கு மேல் தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. கடந்த 24ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி நாளை வரை நடக்கிறது. 


தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் கடந்த 2 27ஆம் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர் 25 மீட்டர் முப்பது மீட்டர் என மூன்று சுடுதலத்தில் பிஸ்டல் பிரிவு போட்டுகளில் கலந்து கொண்ட அவர் இலக்கை நோக்கி சுட்டார். இத எடுத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அஜித்குமார் அன்றைய தினம் இரவே திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். இந்நிலையில் மாநிலத் துப்பாக்கி சுடும் போட்டி ஸ்டில் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளி விழா நேற்று முன்தினம் நடந்தது ஓய்வு பெற்ற டிஜிபி தேவாரம் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் இதில் மொத்தம் 162 பேர் பதக்கம் வென்றனர். இதில் நடிகர் அஜித்குமார் சென்டர் பாயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும் ஸ்டான் டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணிவிகள் தங்கப்பதக்கமும் 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும்  50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம் 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார்..

Post a Comment

0 Comments