BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார்

திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார்

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ,மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் இன்று காலை திருச்சி சுப்ரமணியம் புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை ராமமூர்த்தி இடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது


மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 48 நாட்கள் ஆகிறது. ஆனால் முசிறி தாலுகாவில் இதுவரை மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், கட்டளை வாய்க்கால், வடகரை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. 



இதனால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை . அனைத்து பகுதிகளிலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல 25 ஆயிரம் கன அடி நீர் திறக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments