NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின இரயில்வே தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

திருச்சி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின இரயில்வே தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

திருச்சி  கோட்ட மேலாளர் அலுவலக  நுழைவாயில் முன்பாக, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பொது செயலாளர் Dr.அப்சல் அவர்களின் அறிவுரையின் படி திருச்சி கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், மற்றும் சிறப்பு அழைப்பாளராக, உதவி பொதுச் செயலாளர் பிரசன்ன கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையிலும்,   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


தென்னக இரயில்வே முழுவதும் OBC இன தொழிலாளர்கள் அனைவருக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு சரியான முறைப்படி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தும், OBC பிரிவினருக்கான பின்னடைவு,



பதவி உயர்வு வாய்ப்பினை தாமதப்படுத்தி மூப்பு நிலை இழப்பு, பொருளாதார இழப்பை தடுக்க கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இன்நிகழ் ஒருங்கிணைத்தார் சகாய விஜய் ஆனந்த் கோட்ட தொழிலாளர் நல நிதியுதவி கமிட்டி உறுப்பினர்.இந்த ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments